மாவட்ட செய்திகள்

திருப்போரூர் முருகன் கோவில் தேரோட்டம் கலெக்டர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார் + "||" + Thiruporur Murugan Temple Therottam Collector started holding the rope

திருப்போரூர் முருகன் கோவில் தேரோட்டம் கலெக்டர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்

திருப்போரூர் முருகன் கோவில் தேரோட்டம் கலெக்டர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்
திருப்போரூர் முருகன் கோவில் தேரோட்டத்தை கலெக்டர் ஜான் லூயிஸ் கலந்து கொண்டு வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
திருப்போரூர், 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி கணபதி ஹோமம், ஆறாம் கால பூஜை, அபிஷேக ஆராதனை போன்றவை நடைபெற்றது.

முருகபெருமான் வள்ளி தெய்வானையுடன் காலை மற்றும் இரவு இருவேளையும் கிளி வாகனம், பூத வாகனம், வெள்ளி அன்ன வாகனம், வெள்ளி மயில் வாகனம், தங்கமயில் வாகனம் பஞ்சமூர்த்தி புறப்பாடு, யானை வாகனம் போன்றவற்றில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தேரோட்டம்

அதனை தொடர்ந்து பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது, முருகபெருமான் வள்ளி தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கலெக்டர் ஜான் லூயிஸ் மற்றும் சிவாச்சாரியார்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

தேரோட்டத்தில் திருப்போரூர் எம்.எல்.ஏ. இதய வர்மன், முன்னாள் எம்.பி. மரகதம் குமரவேல் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சுகாதார பணிகளை திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் செய்திருந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வரும் 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தீர்த்தவாரியும், அன்று இரவு தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது. 28-ந்தேதி திருக்கல்யாண விழா நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரேணுகாதேவி, கோவில் செயல் அலுவலர் சக்திவேல், கோவில், மேலாளர் வெற்றிவேல் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை பதவி ஏற்கிறார் கவர்னர் மாளிகையில் எளிமையான விழா
கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் முதல்-அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார். இதற்கான விழா, கவர்னர் மாளிகையில் எளிமையான முறையில் நடத்தப்படுகிறது.
2. தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் 7-ந் தேதி பதவி ஏற்பு கவர்னர் மாளிகையில் விழா
சட்டசபை தேர்தலில் வென்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று சென்னையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் முறைப்படி தேர்வு செய்யப்படுகிறார். வருகிற 7-ந் தேதி கவர்னர் மாளிகையில் நடைபெறும் விழாவில் அவர் பதவி ஏற்கிறார்.
3. 2 ஆயிரம் கிலோ பூக்களால் அலங்கரித்த மண்டபத்தில் விழா: மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் பக்தர்கள் இன்றி நடந்தது
மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று பக்தர்களுக்கு அனுமதி இன்றி நடந்தது. இதனால் கோவில் முன் பெண்கள் திரண்டு மங்கலநாண் மாற்றிக்கொண்டனர்.
4. சென்னை பல்கலைக்கழக 163-வது பட்டமளிப்பு விழா 1,37,745 பேருக்கு கவர்னர் பட்டங்களை வழங்கினார்
சென்னை பல்கலைக்கழகத்தின் 163-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 745 பேருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பட்டங்களை வழங்கினார்.
5. நன்னிலம், மன்னார்குடி பகுதியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
நன்னிலம், மன்னார்குடி பகுதியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.