மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் + "||" + Anganwadi workers wait for 3rd day to insist on demands

கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 210 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர், 

பணி நிரந்தரம் செய்திட வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஒய்வூதியம் வழங்க வேண்டும். ஒய்வு பெறும் ஊழியருக்கு ரூ.10 லட்சமும், உதவியாளருக்கு ரூ.5 லட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

நேற்று 3-வது நாளாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பிரேமா தலைமை தாங்கினார்.

கைது

கூட்டுறவு ஊழியர் சங்க மாநில செயலாளர் சவுந்தரராஜன், சி.ஜ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தம்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அங்கன்வாடி ஊழியர்கள் தரையில் அமர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து திருவாரூர் தாலுகா போலீசார் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 210 பேரை கைது செய்தனர்

தொடர்புடைய செய்திகள்

1. வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்புங்கள்; அரசு போக்குவரத்து ஊழியர்களுங்கு கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
நேற்று 14-வது நாளாக போராட்டம் நீடித்த நிலையில், வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்புங்கள் என்று அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
2. ஹாங்காங்கில் சீன அரசுக்கு எதிராக போராடிய பத்திரிகை அதிபருக்கு சிறை
சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் கடந்த 2019-ம் ஆண்டு சீனாவுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் வெடித்தது.
3. முற்றுகை போராட்டம் எதிரொலி; அதிகாரிகளின் அனுமதியுடன் செயல்பட்ட கோயம்பேடு சில்லரை காய்கறி கடைகள்; வியாபாரிகள் மகிழ்ச்சி
கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு அமலுக்கு வந்த நிலையில், அதிகாரிகள் அனுமதியுடன் கோயம்பேடு சில்லரை காய்கறி கடைகள் செயல்பட்டன.
4. அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தி்ல் ஈடுபட்டனர்.
5. டெல்லியில் 118-வது நாளாக விவசாயிகள் போராட்டம்; 3 மாநிலங்களில் சுங்க கட்டண இழப்பு ரூ.815 கோடி
டெல்லியில் விவசாயிகள் 118-வது நாளாக போராட்டம் நடத்தி வருவதால் 3 மூன்று மாநிலங்களில் ரூ.815 கோடி சுங்க கட்டண இழப்பு ஏற்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.