மாவட்ட செய்திகள்

சென்னை புத்தக கண்காட்சியில் பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி 5, 6, 7-ந் தேதிகளில் நடக்கிறது + "||" + Painting competition for school students will be held on 5th, 6th and 7th at Chennai Book Fair

சென்னை புத்தக கண்காட்சியில் பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி 5, 6, 7-ந் தேதிகளில் நடக்கிறது

சென்னை புத்தக கண்காட்சியில் பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி 5, 6, 7-ந் தேதிகளில் நடக்கிறது
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 44-வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
சென்னை, 

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 44-வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களுக்கான ஓவிய போட்டி அடுத்த மாதம் (மார்ச்) 5, 6 மற்றும் 7-ந்தேதிகளில் நடைபெற இருக்கிறது.

5-ந்தேதி 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு எங்கள் குடும்பம், புத்தக உலகம் என்ற தலைப்பிலும், 6-ந்தேதி 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகமும் நானும், இயற்கையும் வாழ்வும் என்ற தலைப்பிலும், 7-ந்தேதி 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கையிலிருக்கும் பூமி, உடலினை உறுதி செய் என்ற தலைப்பிலும் ஓவிய போட்டி நடக்கிறது.

ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.1,000, ஆறுதல் பரிசாக ரூ.500 வழங்கப்படுகிறது. இதற்காக புத்தக கண்காட்சி நடைபெறும் இடத்தில் மாணவர்கள் வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

1. சீரி ஏ கால்பந்து: யுவென்டஸ் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டியது இன்டர்மிலன்
சீரி ஏ கால்பந்து: யுவென்டஸ் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டியது இன்டர்மிலன்.
2. மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்:கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் சாம்பியன்
மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்தது.
3. கிராம வளர்ச்சிக்காக பஞ்சாயத்து தேர்தலில் 81 வயது மூதாட்டி போட்டி
கிராம வளர்ச்சிக்காக பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 81 வயது மூதாட்டி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
4. கொரோனா பரவல் எதிரொலி: தேசிய பெண்கள் ஆக்கி போட்டி தள்ளிவைப்பு
கொரோனா பரவல் எதிரொலி: தேசிய பெண்கள் ஆக்கி போட்டி தள்ளிவைப்பு.
5. உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 பதக்கம்
டெல்லியில் நடந்து வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் 2-வது நாளில் இந்தியா 5 பதக்கங்களை அள்ளியது.