மாவட்ட செய்திகள்

சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர் லாரி மோதி ஊழியர் பலி நஷ்டஈடு கேட்டு சக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Co-workers protest demanding compensation for container truck collision employee killed in Chennai port

சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர் லாரி மோதி ஊழியர் பலி நஷ்டஈடு கேட்டு சக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர் லாரி மோதி ஊழியர் பலி நஷ்டஈடு கேட்டு சக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர் லாரி மோதி ஊழியர் பலியானார். அவரது குடும்பத்துக்கு நஷ்டஈடு கேட்டு சக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பூர், 

சென்னை திருவல்லிக்கேணி கற்பகம் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 50). இவர், சென்னை துறைமுகத்தில் வேலை செய்து வந்தார். நேற்று மாலை வழக்கம்போல் மோட்டார் சைக்கிளில் துறைமுகத்துக்குள் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த கன்டெய்னர் லாரி இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தமிழ்மணி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்டெய்னர் லாரி டிரைவரான கொளத்தூர் சக்தி நகரை சேர்ந்த சரவணன் (21) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம்

இதனால் அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் 50 பேர், பலியான தமிழ்மணி குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்ககோரி துறைமுக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய துறைமுக அதிகாரிகள், பலியான தமிழ்மணி குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்குவதாக உறுதி அளித்தனர். இதனால் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் துறைமுக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. 2 மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற கடன் தவணை தொகையை கேட்டு வீட்டு வாசலில் அமர்ந்த நிதி நிறுவன ஊழியர்கள்
கடன் தவணை தொகையை கேட்டு வீட்டு வாசலில் நிதி நிறுவன ஊழியர்கள் அமர்ந்தனர்.
2. தெப்பக்குளத்தை சுத்தப்படுத்தும் ஊழியர்கள்
தெப்பக்குளத்தை சுத்தப்படுத்தும் ஊழியர்கள்
3. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு: துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர் திடீர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது. இதற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர், பல்வேறு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
4. கொரோனாவால் வியாபாரத்துக்கு தடை சென்னையில் நடைபாதை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அனைத்து திருவிழாக்கால வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
5. நாகை, வேதாரண்யத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாகை, வேதாரண்யத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.