மாவட்ட செய்திகள்

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Teen commits suicide by hanging

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.
கோவை,

கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் மணிவண்ணன். மெக்கானிக். இவருடைய மனைவி திவ்யபாரதி (வயது 26). அதே பகுதியை சேர்ந்தவர் சர்ளா(26). இவர்கள் இருவரும் இணைபிரியா தோழிகள். 

இந்த நிலையில் சர்ளாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைக்கு  அழைத்து சென்றனர். அவரை, திவ்யபாரதி உடனிருந்து கவனித்து வந்தார். 

ஆனால் திடீரென்று உடல்நிலை மோசமடைந்து சர்ளா கடந்த சில நாட்களுக்கு முன்பு பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த திவ்யபாரதி சோகமாக காணப்பட்டார். அவருக்கு கணவர் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறினர். 

ஆனாலும் தோழியின் இழப்பை தாங்க முடியாத மன வேதனையில் இருந்த திவ்யபாரதி, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. நங்கவள்ளி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
2. இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பல்லடம் அருகே குடும்பத்தகராறில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
3. திருவள்ளூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருவள்ளூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. குழந்தை இல்லாத ஏக்கத்தால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
குழந்தை இல்லாத ஏக்கத்தால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பொள்ளாச்சி சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை
திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.