மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் விலைவாசி குறையும். விக்கிரமராஜா பேட்டி. + "||" + Bringing petrol and diesel under GST will reduce prices

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் விலைவாசி குறையும். விக்கிரமராஜா பேட்டி.

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் விலைவாசி குறையும். விக்கிரமராஜா பேட்டி.
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் விலைவாசி குறையும். விக்கிரமராஜா பேட்டி.
திருவண்ணாமலை

பேட்டி

திருவண்ணாமலையில் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் அடங்காமல் போய் கொண்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்த கூடிய கியாஸ் சிலிண்டர் ஒரு மாதத்தில் மட்டும் 3 முறை விலை ஏறியுள்ளது. 

சாதாரண கூலி தொழிலாளி வாங்கி பயன்படுத்த கூடிய எண்ணெய் வித்துக்கள் 30 நாட்களுக்குள் கிலோவிற்கு ரூ.40 விலையேற்றப்பட்டு உள்ளது. 

பாமாயில் விலை கடந்த ஆண்டு ரூ.60 ஆக இருந்தது. இந்த ஆண்டு ரூ.140 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றத்திற்கு வியாபாரிகள் காரணமாக இருக்கலாம் என்று கூட பொது மக்கள் நினைக்கின்றனர். தெளிவாக சொல்லுகிறோம், இந்த விலையேற்றத்திற்கு நாங்கள் காரணமல்ல. 

பெட்ரோல், டீசலை...

பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் கண்டிப்பாக விலைவாசி குறைய வாய்ப்பு உள்ளது. எனவே, விலையேற்றத்தை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கடந்த 10 ஆண்டுகளாக வணிகர்கள் நல வாரியம் முடங்கி உள்ளது. வணிகர்கள் நல வாரியத்தில் ஜி.எஸ்.டி. நம்பர் உள்ளவர்கள் மட்டுமே பதிவு செய்யக்கூடிய நிலை உள்ளது. அதை மாற்றி அனைத்து வணிகர்களும் வாரியத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

 உள்ளாட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் அறநிலையத்துறை கடைகளை கட்டாயமாக 7 மாதங்கள் மூட சொன்னது அரசு. ஆனால் மூடிய கடைகளுக்கும் அரசு வாடகை கேட்கிறது. இதில் 6 மாத வாடகையை தள்ளுபடி செய்ய கேட்டு இருந்தோம். இதுபோன்று பல்வேறு கோரிக்கைகள் நிலுவையில் உள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.94.31-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
2. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.94.31-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
3. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.94.09-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
4. சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.84-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
5. சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.84-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.