மாவட்ட செய்திகள்

தர்ணா நடத்தி சட்டசபையின் நேரத்தை வீணடித்துவிட்டது; காங்கிரஸ் மீது கர்நாடக மந்திரி பசவராஜ் பொம்மை குற்றச்சாட்டு + "||" + Darna has wasted the time of the conducting assembly; Karnataka Minister Basavaraj charge against Congress

தர்ணா நடத்தி சட்டசபையின் நேரத்தை வீணடித்துவிட்டது; காங்கிரஸ் மீது கர்நாடக மந்திரி பசவராஜ் பொம்மை குற்றச்சாட்டு

தர்ணா நடத்தி சட்டசபையின் நேரத்தை வீணடித்துவிட்டது; காங்கிரஸ் மீது கர்நாடக மந்திரி பசவராஜ் பொம்மை குற்றச்சாட்டு
தர்ணா நடத்தி சட்டசபையின் மதிப்புமிக்க நேரத்தை காங்கிரஸ் வீணடித்துவிட்டது என்று கர்நாடக மந்திரி பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டி உள்ளார்.

கர்நாடக சட்டசபை நிகழ்வுகள் குறித்து சட்டசபை விவகாரத்துறை மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாள் முழுவதும் தர்ணா

சட்டசபையில் காங்கிரஸ் இதற்கு முன்பு இவ்வளவு மோசமாக நடந்து கொண்டது இல்லை. இன்று (அதாவது நேற்று) அக்கட்சி உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் உண்மையிலேயே வருத்தம் அளிப்பதாக உள்ளது. ஒரே தேசம் ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க காங்கிரசார் முன்பு ஒப்புக்கொண்டனர். பட்ஜெட் கூட்டத்தொடரின்போது இதுபற்றி விவாதிக்கலாம் என்று அக்கட்சியினர் கூறினர். அவர்களின் ஆலோசனைப்படியே இந்த விவாதம் நடத்தப்படுகிறது.

ஆனால் தற்போது காங்கிரஸ் ஏதாவது காரணத்தை கூறி இந்த விவாதத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறது. கர்நாடக சட்டசபை வரலாற்றில் சபாநாயகர் மேற்கொண்ட முடிவுக்கு எதிராக நாள் முழுவதும் தர்ணா நடத்தியது கண்டிக்கத்தக்கது. சங்கமேஸ்வர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் அவர் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆஜராகவில்லை

தர்ணா நடத்தி சட்டசபையின் மதிப்புமிக்க நேரத்தை காங்கிரசார் வீணடித்துவிட்டனர். தர்ணா மூலம் சபையை சட்டவிரோதமாக தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டது ஏற்கக்கூடியது அல்ல. சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது கடந்த 2016-ம் ஆண்டு இந்த ஒரே தேசம் ஒரே தேர்தல் நடைமுறைக்கு காங்கிரசார் ஆதரவு வழங்கினர். ஆனால் சித்தராமையா தற்போது அதற்கு நேர் எதிராக செயல்படுகிறார்.

சங்கமேஸ்வரை தனது அறைக்கு வருமாறு சபாநாயகர் அழைப்பு விடுத்தார். ஆனால் அவர் சபாநாயகர் முன் ஆஜராகவில்லை. அதன் பிறகு சபையில் அவர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார். அவரது ஒழுங்கீனத்தை காங்கிரஸ் கட்சி ஆதரிப்பது சரியல்ல. காங்கிரஸ் எதிர்க்கட்சியாக நல்ல முறையில் செயலாற்ற தவறவிட்டது. நாடு முழுவதும் காங்கிரஸ் தோல்வி அடைந்து வருகிறது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில் சட்டசபையில் முன்வரிசைக்கு போட்டி போட்ட பிரின்ஸ், விஜயதரணி
சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், சட்டசபையில் முன்வரிசை இருக்கைக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், விஜயதரணி ஆகியோர் போட்டி போட்டனர். இதனால், உள்கட்சி பிரச்சினை அவையிலும் எதிரொலித்தது.
2. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் திக்ரி எல்லையை விட்டு வெளியேற வேண்டும் - பா.ஜனதா வலியுறுத்தல்
பெண் மீது பாலியல் வன்முறை செய்யப்பட்டதன் எதிரொலியாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் திக்ரி எல்லையை விட்டு வெளியேற வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.
3. தேர்தல் தோல்வி குறித்து ஆராய 5 பேர் கொண்ட குழு அமைத்தது காங்கிரஸ் தலைமை
4 மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆராய 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைமை அமைத்தது.
4. நோயாளிகள் உள்ளிருப்பு போராட்டம்
சிதம்பரம் கொரோனா தனிமைப்படுத்தும் மையத்தில் நோயாளிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. 5 மாநில சட்டசபை தேர்தல் தோல்வியில் பாடம் கற்றுக் கொண்டு கட்சியை சீரமைக்க வேண்டும்; காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியாகாந்தி பேச்சு
5 மாநில சட்டசபை தேர்தல்களில் ஏற்பட்ட கடுமையான பின்னடைவில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு கட்சியை சரி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியாகாந்தி பேசினார்.