மாவட்ட செய்திகள்

தேவேந்திர குல மக்கள் இயக்கத்தினர் போராட்டம் + "||" + Devendra Kula People's Movement Struggle

தேவேந்திர குல மக்கள் இயக்கத்தினர் போராட்டம்

தேவேந்திர குல மக்கள் இயக்கத்தினர் போராட்டம்
நெல்லையில் தேவேந்திர குல மக்கள் இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
நெல்லை, மார்ச்:
தேவேந்திர குல மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாநில அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் தலைமையில், நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள், கலெக்டர் விஷ்ணுவை சந்தித்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ‘எங்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் குமுளி ராஜ்குமார் மற்றும் அருண், வினோத் பாண்டியன் ஆகியோரை தச்சநல்லூர் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. குமுளி ராஜ்குமார் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தபோது அவசர அவசரமாக கைது செய்துள்ளனர். இதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குமுளி ராஜ்குமார் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் திக்ரி எல்லையை விட்டு வெளியேற வேண்டும் - பா.ஜனதா வலியுறுத்தல்
பெண் மீது பாலியல் வன்முறை செய்யப்பட்டதன் எதிரொலியாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் திக்ரி எல்லையை விட்டு வெளியேற வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.
2. நோயாளிகள் உள்ளிருப்பு போராட்டம்
சிதம்பரம் கொரோனா தனிமைப்படுத்தும் மையத்தில் நோயாளிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. சாலையில் பாலை கொட்டி போராட்டம்
முழுமையாக கொள்முதல் செய்ய வலியுறுத்தி பாலை சாலையில் ெகாட்டி போராட்டம் நடைபெற்றது.
4. ஒப்பந்த பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
ஒப்பந்த பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
5. பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தப்பட்டது.