மாவட்ட செய்திகள்

கொரோனா பரவல் அதிகரிப்பால் கர்நாடகத்தில் கல்லூரிகளுக்கு இன்று முதல் விடுமுறையா? துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பதில் + "||" + Is today the first holiday for colleges in Karnataka due to the increase in corona spread? Deputy CM Ashwat Narayan's reply

கொரோனா பரவல் அதிகரிப்பால் கர்நாடகத்தில் கல்லூரிகளுக்கு இன்று முதல் விடுமுறையா? துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பதில்

கொரோனா பரவல் அதிகரிப்பால் கர்நாடகத்தில் கல்லூரிகளுக்கு இன்று முதல் விடுமுறையா? துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பதில்
கொரோனா பரவல் அதிகரிப்பால் கர்நாடகத்தில் இன்று (திங்கட்கிழமை) கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பதிலளித்துள்ளார்.

கல்லூரிகளுக்கு விடுமுறை

கர்நாடகத்தில் கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் கல்லூரிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் 15 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இந்த தகவலை துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கல்லூரிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. கல்லூரிகளுக்கு விடுமுறை எண்ணம் அரசுக்கு இல்லை. விஷமிகள் யாரோ சிலர், அரசின் சுற்றறிக்கை போலியாக தயாரித்து வெளியிட்டுள்ளனர். அது சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவியுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

விளையாடக்கூடாது

அரசின் பெயரில் போலி அறிக்கையை தயாரித்து வெளியிடுவது பெரிய குற்றம். அதனால் இதுகுறித்து அந்த விஷயமிகளை உடனே கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளோம். மாணவர்களின் எதிர்காலத்துடன் யாரும் விளையாடக்கூடாது. ஏற்கனவே கொரோனா பயம் உள்ளது. கல்வி நடைமுறை தடம் புரளாமல் செல்ல அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. ஆனால் சிலர் இத்தகைய தவறான விஷயங்களை பரப்புவது என்து கண்டிக்கத்தக்கது. அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் வரும் 6 ஆம் தேதி முதல் 1 - 8-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு
புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 6ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
2. மெட்ரோ ரெயிலில் 6 மாதத்தில் 1.30 கோடி பேர் பயணம்
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுபாடுகளில் அரசு தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து சென்னை மெட்ரோ ரெயில் சேவை கடந்த ஜூன் 21-ந்தேதி முதல் தொடங்கியது.
3. கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் கமல்ஹாசன்
கொரோனா சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன் குணமடைந்து விட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
4. மாணவிக்கு ஆபாச குறுந்தகவல்: சென்னை பேராசிரியர் கைது
பேராசிரியர் தமிழ்ச்செல்வனை கைது செய்யக்கோரி 2 நாட்களாக கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
5. ஒமிக்ரான் அச்சுறுத்தல்: மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
ஒமிக்ரான் கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவில் வரும் டிசம்பர் 31- ஆம் தேதி வரை தற்போது உள்ள கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.