மாவட்ட செய்திகள்

எல்.ஐ.சி. ஊழியர்கள் வேலை நிறுத்தம் + "||" + LIC Employees strike

எல்.ஐ.சி. ஊழியர்கள் வேலை நிறுத்தம்

எல்.ஐ.சி. ஊழியர்கள் வேலை நிறுத்தம்
கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
பெரம்பலூர்:
எல்.ஐ.சி. பங்கை தனியாருக்கு மத்திய அரசு விற்கக்கூடாது. எல்.ஐ.சி.யில் அந்நிய முதலீடு 19 சதவீதமாக இருந்ததை, 74 சதவீதமாக உயர்த்தியதை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். எல்.ஐ.சி. ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உயர்த்தாமல் 43 மாதங்களாக பேச்சுவார்த்தையில் உள்ளது. அதற்கு மத்திய அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் எல்.ஐ.சி. ஊழியர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வெங்கடேசபுரத்தில் உள்ள பெரம்பலூர் எல்.ஐ.சி. கிளை அலுவலகத்தில் பணிபுரியும் 37 ஊழியர்கள் நேற்று பணிக்கு வராததால், அந்த அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதே போல் வெங்கடசேபுரத்தில் உள்ள மற்றொரு எல்.ஐ.சி. கிளை அலுவலகத்திற்கு ஊழியர்கள் யாரும் பணிக்கு வராததால், அந்த அலுவலகம் மூடப்பட்டிருந்தது. இதனால் எல்.ஐ.சி. வாடிக்கையாளர்கள் தங்களது பாலிசிக்கான பிரீமிய தொகையை கட்ட முடியாமல் தவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. நம்பியூர் பகுதியில் 200 பனியன் நிறுவனங்கள் மூடல்: தையல் உரிமையாளர்கள் கூலிஉயர்வு கேட்டு வேலை நிறுத்தம்- 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பு
நம்பியூர் பகுதியில் தையல் உரிமையாளர்கள் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 200 பனியன் தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டன. 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
3. கள்ளக்குறிச்சியில் போர்வெல் எந்திர லாரி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்
டீசல் விலை உயர்வை கண்டித்து கள்ளக்குறிச்சியில் போர்வெல் எந்திர லாரி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்
4. நெல்லையில் கியாஸ் சிலிண்டர் ஊழியர்கள் வேலை நிறுத்தம்; கோரிக்கையை வலியுறுத்தி எம்.எல்.ஏ.விடம் மனு
நெல்லையில் கியாஸ் சிலிண்டர் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கையை வலியுறுத்தி அப்துல் வகாப் எம்.எல்.ஏ.விடம் மனு கொடுத்தனர்.