மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில்போலீஸ், அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போடும் பணி தொடக்கம் + "||" + in thoothukudi, police and government employees start postal vote

தூத்துக்குடியில்போலீஸ், அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போடும் பணி தொடக்கம்

தூத்துக்குடியில்போலீஸ், அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போடும் பணி தொடக்கம்
தூத்துக்குடியில் போலீஸ், அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போடும் பணி நேற்று தொடங்கியது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் போலீஸ், அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போடும் பணி நேற்று தொடங்கியது.
சட்டமன்ற தேர்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் வருகிற 6-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த வாக்குப்பதிவு மொத்தம் 2 ஆயிரத்து 97 வாக்குச்சாவடிகளில் நடக்கிறது. 
இந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்காக 10 ஆயிரத்து 66 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதே போன்று பாதுகாப்பு பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதைத் தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் ஓட்டு போடுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி நேற்று தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் தபால் ஓட்டு போடுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
தபால் ஓட்டு
இதனால் நேற்று காலை முதல் போலீசார் மற்றும் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போடுவதற்காக வந்தனர். அவர்களுக்கு அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் தபால் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டது. அதனை பெற்றுக் கொண்ட அலுவலர்கள், அதற்கென நியமிக்கப்பட்டு உள்ள அலுவலர்களிடம் கையொப்பம் பெற்றனர். பின்னர் வாகுப்பதிவு செய்வதற்காக அமைக்கப்பட்டு உள்ள இடத்தில் சென்று வாக்குப்பதிவு செய்தனர். அந்த வாக்குச்சீட்டை உரிய தபால் உறையில் வைத்து வாக்குப்பெட்டியில் போட்டனர்.
3-ந் தேதி 
நேற்று ஏராளமான போலீசார் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். இதே போன்று வருகிற 3-ந் தேதி நடைபெறும் பயிற்சியின் போதும் தபால் ஓட்டு போடலாம். அதற்கு பிறகு நேரடியாக தபால் மூலம் அனுப்பி வைக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளத

தொடர்புடைய செய்திகள்

1. மயிலம் அருகே ரத்தக்காயங்களுடன் வாலிபர் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை
மயிலம் அருகே ரத்தக்காயங்களுடன் வாலிபர் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை.
2. பெண் போலீஸ் வீட்டில் 27½ பவுன் நகை கொள்ளை
கள்ளக்குறிச்சி அருகே பெண் போலீஸ் வீட்டில் 27½ பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. திருமுல்லைவாயலில் கொரோனா பாதிப்பால் போலீஸ் ஏட்டு பலி
திருமுல்லைவாயலில் கொரோனா பாதிப்பால் போலீஸ் ஏட்டு பலி.
4. கொரோனா ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம் போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு
கொரோனா ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகளை போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி நியமித்துள்ளார்.
5. மாமல்லபுரம் கடற்கரைக்கு செல்லும் அனைத்து பாதைகளையும் அடைக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
மாமல்லபுரம் கடற்கரைக்கு செல்லும் அனைத்து பாதைகளையும் அடைக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.