மாவட்ட செய்திகள்

நடிகர் அமிதாப் பச்சன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் + "||" + Actor Amitabh Bachchan was vaccinated against corona

நடிகர் அமிதாப் பச்சன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

நடிகர் அமிதாப் பச்சன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்
மராட்டியத்தில் கடந்த ஆண்டு மார்ச் முதல் ஆட்டி படைத்த கொரோனா பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை.

குறிப்பாக இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மகனும், நடிகருமான அபிசேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆராத்யா ஆகியோரும் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு பிறகு அவர்கள் உடல் நலம் தேறினார்.

இந்த ஆண்டிலும் கொரோனா மீண்டும் விசுவரூபம் எடுத்து தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக பலர் தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக நடிகர் அமிதாப் பச்சன் நேற்று தனது வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘வீட்டில் உள்ள அனைவரும் நேற்று கொரோனா பரிசோதனை செய்தோம். இன்று பரிசோதனை முடிவு வந்தது. நல்லவிதமாக யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து நாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டோம். அபிசேக் பச்சனை தவிர அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொண்டோம். அவர் தற்போது வெளியே இருக்கிறார்’’ என்றார்.

மேலும் அமிதாப் பச்சன் தடுப்பூசி போட்டுக்கொண்ட படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அபிசேக் பச்சன் சினிமா படப்பிடிப்புக்காக வெளிமாநிலத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் நேற்று புதிதாக 497 பேருக்கு கொரோனா பாதிப்பு
மும்பையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
2. நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ஆட்டத்தில் பாதிப்பு ஏற்படவில்லை - ஐதராபாத் பயிற்சியாளர் கருத்து
ஐதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ஆட்டத்தில் பாதிப்பு ஏற்படவில்லை என அணியின் பயிற்சியாளர் பெய்லிஸ் தெரிவித்துள்ளார்.
3. ஆந்திராவில் புதிதாக 1,171 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
ஆந்திராவில் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 13,749 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4. அசாமில் நேற்று 371 பேருக்கு கொரோனா; 555 பேர் டிஸ்சார்ஜ்
அசாமில் தற்போது 3,339 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. கர்நாடகத்தில் இன்று 852 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
கர்நாடகாவில் தற்போது 13,590 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.