மாவட்ட செய்திகள்

மத்திய அரசு ஒத்துழைப்பு இருந்தால் தான் புதுச்சேரியில் வளர்ச்சியை கொண்டுவர முடியும்; தேர்தல் பிரசாரத்தில் ரங்கசாமி பேச்சு + "||" + Growth in Pondicherry can only be achieved with the cooperation of the Central Government; Rangasamy's speech during the election campaign

மத்திய அரசு ஒத்துழைப்பு இருந்தால் தான் புதுச்சேரியில் வளர்ச்சியை கொண்டுவர முடியும்; தேர்தல் பிரசாரத்தில் ரங்கசாமி பேச்சு

மத்திய அரசு ஒத்துழைப்பு இருந்தால் தான் புதுச்சேரியில் வளர்ச்சியை கொண்டுவர முடியும்; தேர்தல் பிரசாரத்தில் ரங்கசாமி பேச்சு
மத்திய அரசு ஒத்துழைப்பு இருந்தால் தான் புதுச்சேரியில் வளர்ச்சியை கொண்டு வரமுடியும் என்று தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

அமோக வெற்றி

புதுவை லாஸ்பேட்டை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் சாமிநாதன் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ரங்கசாமி நேற்று மாலை மகாவீர் நகரில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

பா.ஜ.க., என்ஆர்.காங்., அ.தி.மு.க., பா.ம.க. இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, தொழிற்சாலைகள் நிறைய கொண்டு வர வேண்டும். மத்திய அரசு உதவி செய்தால் தான் இதையெல்லாம் செய்ய முடியும். சிறிய பகுதியான புதுச்சேரியில் விற்பனை வரி, கலால் வருமானம் மட்டும் தான். வேறு ஒன்றும் கிடையாது.

மத்திய அரசு ஒத்துழைப்பு

படிக்கிற பிள்ளைகளுக்கு வேலை இல்லை. பி.டெக் படித்து விட்டு ரூ.5 ஆயிரம், ரூ.6 ஆயிரம் சம்பளத்துக்கு ஜவுளி கடையில் பில் போடுகிறார்கள். அப்படிப்பட்ட நிலை தான் புதுச்சேரியில் இருக்கிறது. இதையெல்லாம் நாம் வந்து மாற்ற வேண்டும். மத்திய அரசு ஒத்துழைப்பு இருந்தால் தான் புதுச்சேரியில் வளர்ச்சியை கொண்டுவர முடியும். இல்லாவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.


தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசின் நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரூ. 26,000 கோடி கடன் பத்திரங்கள் ஏலம்
கடன் பத்திரங்கள் ஏலத்தின் மூலம் மத்திய அரசின் நிதி பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2. மத்திய அரசு நேருவை ஏன் இவ்வளவு வெறுக்கிறது; சிவசேனா கேள்வி
மு.க.ஸ்டாலின் முதிர்ச்சியை காட்டும் அதே நேரம், மத்திய அரசு நேருவை ஏன் இவ்வளவு வெறுக்கிறது என சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.
4. தொற்று பாதிப்பு அதிகரிப்பு: கேரள எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு வலியுறுத்தல்
கேரள எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழகம், கர்நடக மாநிலங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
5. 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்: சட்டசபையில் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் மொழிந்த தீர்மானம் சட்டசபையில் நேற்று நிறைவேறியது.