மாவட்ட செய்திகள்

மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் + "||" + Fisher problems will be solved

மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்

மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்
மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என மத்திய மீன்வளத்துறை மந்திரி கூறினார்
பனைக்குளம்
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குப்புராமுவை ஆதரித்து மத்திய மீன்வளத்துறை மந்திரி கிரிராஜ் சிங் நேற்று வாக்கு சேகரித்தார். பின்னர் அவர் அ.தி.மு.க. மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்வர்ராஜாவை சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது, தமிழகத்தில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும். ராமேசுவரம் மீனவர்களின் முக்கிய பிரச்சினையாக உள்ள கச்சத்தீவு பிரச்சினை, சுருக்கு மடிவலை பிரச்சினை மற்றும் மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகை முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடல் அட்டைகள் மீதான தடையை நீக்குவது குறித்து ஆய்வு செய்யப்படும். வளர்ச்சியடைந்த நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படுவது போல மீனவர் கிராமங்களை மேம்படுத்த ஸ்மார்ட் வில்லேஜ் திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மாவட்ட கோர்ட்டில் 4,896 வழக்குகளுக்கு தீர்வு
மதுரை ஐகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டுகளில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் மூலம் பல்வேறு வழக்குகளில் சுமுக தீர்வு காணப்பட்டது.
3. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 162 வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 162 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.