மாவட்ட செய்திகள்

பவானிசாகர் அருகேஜீப்- மோட்டார்சைக்கிள் மோதல்; வாலிபர் பலி + "||" + accident death

பவானிசாகர் அருகேஜீப்- மோட்டார்சைக்கிள் மோதல்; வாலிபர் பலி

பவானிசாகர் அருகேஜீப்- மோட்டார்சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
பவானிசாகர் அருகே மோட்டார்சைக்கிள், ஜீப் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
பவானிசாகர்
பவானிசாகர் அருகே மோட்டார்சைக்கிள், ஜீப் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். 
கூலித்தொழிலாளி
பவானிசாகர் அருகே உள்ள புதுபீர்கடவு பட்ரமங்கலத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 30). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளது.  
முருகன் அந்த பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் நேற்று சென்று கொண்டிருந்தார். பவானிசாகரை அடுத்த தொப்பம்பாளையம் ரோட்டில் கிரஷர் மேடு அருகே சென்றபோது எதிரே வந்த ஜீப்பும், மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. 
சாவு
இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து முருகன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே முருகன் இறந்துவிட்டதாக கூறினர். 
இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. கூலித்தொழிலாளி விபத்தில் பலி
கூலித்தொழிலாளி விபத்தில் பலியானார்.
2. பவானி அருகே ஆவின் பால் ஏற்றி வந்த வேன் மோதி மாணவி பலி
பவானி அருகே ஆவின் பால் ஏற்றி வந்த வேன் மோதி மாணவி பலி ஆனார்.
3. விருந்துக்கு சென்ற புதுமாப்பிள்ளை பரிதாப சாவு
கயத்தாறு அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் விருந்துக்கு சென்று திரும்பிய புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.
4. விபத்தில் தொழிலாளி சாவு
சங்கரன்கோவில் அருகே விபத்தில் தொழிலாளி பலியானார்.
5. குருவிகுளம் அருகே விபத்து: தாய்-மகன் பரிதாப சாவு
குருவிகுளம் அருகே சாலையோர தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தாய்-மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.