மாவட்ட செய்திகள்

மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவேன்; தேர்தல் பிரசாரத்தில் ரங்கசாமி உறுதி + "||" + Whoever is in power in the middle will bring development plans; Rangasamy confirmed in the election campaign

மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவேன்; தேர்தல் பிரசாரத்தில் ரங்கசாமி உறுதி

மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவேன்; தேர்தல் பிரசாரத்தில் ரங்கசாமி உறுதி
மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவேன் என்று தேர்தல் பிரசாரத்தில் ரங்கசாமி பேசினார்.

பிரசாரம்

பாகூர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் தனவேலு போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ரங்கசாமி நேற்று 2-வது நாளாக பிரசாரம் செய்தார்.அதன்படி காட்டுக்குப்பம், மணப்பட்டு, மதி கிருஷ்ணாபுரம், பாகூர், பரிக்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், குருவிநத்தம், சோரியாங்குப்பம், இருளஞ்சந்தை, கடுவனூர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

காலிப்பணியிடங்கள்

எம்.எல்.ஏ.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை கேட்டதற்காக தனவேலுவை தகுதி நீக்கம் செய்தனர். கடந்த 5 ஆண்டு காலமாக காங்கிரஸ் மோசமான ஆட்சியை நடத்தியது. அதில் தி.மு.க.வுக்கும் பங்கு உள்ளது. காங்கிரஸ் அறிவித்த ஒரு தேர்தல் வாக்குறுதியை கூட நிறைவேற்ற முடியவில்லை.

புதுச்சேரியில் 9,500 அரசு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அடுத்து என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி தான் அமையப் போகிறது. அப்போது வேலைவாய்ப்பு வயது வரம்பு 35-ல் இருந்து 40 ஆக உயர்த்தப்படும். ஆட்சிக்கு வந்த ஓராண்டில் காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.

வளர்ச்சி திட்டங்கள்

2011-ல் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி எப்படி செயல்பட்டதோ, அதுபோல், மீண்டும் செயல்படுவோம். 12 ஆண்டுகள் முதல்-அமைச்சராக இருந்துள்ளேன். அமைச்சராக பதவி வகித்துள்ளேன். மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும், புதுச்சேரி மக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவேன்.

பாகூர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தனவேலுவை வெற்றி பெற செய்து, மீண்டும் சட்டமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


தொடர்புடைய செய்திகள்

1. என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு எதிராக தெருவில் இறங்கி போராடுவோம் நாராயணசாமி
தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் 100 நாட்களுக்குள் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. அரசு நிறைவேற்றாவிட்டால் தெருவில் இறங்கி போராடுவோம் என நாராயணசாமி தெரிவித்தார்.
2. கொரோனா பரவல் எதிரொலியாக நடவடிக்கை: புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து; ரங்கசாமி அதிகாரபூர்வ அறிவிப்பு
கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வை ரத்து செய்து முதல்-அமைச்சர் ரங்கசாமி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
3. என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. இடையேயான அமைச்சரவை விரிவாக்க உடன்பாடு சுமுகமாக முடிந்தது முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி
என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. இடையே அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததாக முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
4. என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. பேச்சுவார்த்தையில் சமரசம் புதுவை அமைச்சரவை 14-ந்தேதி பதவி ஏற்பு
புதுவை அமைச்சரவை பங்கீட்டில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. இடையே சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பதவி ஏற்பு விழா வருகிற 14-ந்தேதி நடக்கிறது.
5. பிரதமர் மோடி, ரங்கசாமியுடன் பேச்சு: அமைச்சர் பதவிகள் குறித்து பேச புதுச்சேரிக்கு மத்திய மந்திரி வருகை; என்.ஆர்.காங்.- பா.ஜ.க. சமரசம் ஆகுமா?
ரங்கசாமியுடன் பிரதமர் மோடி பேசியதை அடுத்து அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வது குறித்து பேச மத்திய மந்திரி புதுச்சேரி வருகிறார்.