மாவட்ட செய்திகள்

கரும்பு, சோளத்தட்டைகள் தீயில் எரிந்து நாசம் + "||" + Destroyed by fire

கரும்பு, சோளத்தட்டைகள் தீயில் எரிந்து நாசம்

கரும்பு, சோளத்தட்டைகள் தீயில் எரிந்து நாசம்
கரும்பு, சோளத்தட்டைகள் தீயில் எரிந்து நாசமானது.
நொய்யல்
கரூர் மாவட்டம் கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 55). விவசாயி. இவருக்கு சொந்தமான கரும்பு தோட்டம் முத்தனூர் அருகே உள்ளது. இந்நிலையில் கடும் வெயிலின் காரணமாக கரும்பு தோட்டத்தில் கரும்பிலிருந்து தோகைகள் காய்ந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் கரும்பு தோட்டம் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதையடுத்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.இதேபோல் மூர்த்தி பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (55). கால்நடைகளுக்கு தீவனமாக போடுவதற்கு வீட்டின் அருகே 3 சோளத்தட்டை போர்களை வைத்திருந்தனர். இந்நிலையில் சோளத்தட்டை போரில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதையடுத்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சோளத்தட்டை போர்கள் தீயில் எரிந்து நாசமாயின.

தொடர்புடைய செய்திகள்

1. வைக்கோல் படப்புகள் தீயில் எரிந்து நாசம்
மூலைக்கரைப்பட்டியில் வைக்கோல் படப்புகள் தீயில் எரிந்து நாசமாயின.
2. வைக்கோல் படப்பு தீயில் எரிந்து நாசம்
மானூர் அருகே வைக்கோல் படப்பு தீயில் எரிந்து நாசமானது.