மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி அருகேதொழிலாளி மீது தாக்குதல் + "||" + near kovilpatti, attack on worker

கோவில்பட்டி அருகேதொழிலாளி மீது தாக்குதல்

கோவில்பட்டி அருகேதொழிலாளி மீது தாக்குதல்
கோவில்பட்டி அருகே தொழிலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அடுத்துள்ள பார்ப்பாள்புரதத்தை சேர்ந்த குருசாமி மகன் பெருமாள்(வயது 45).கூலி தொழிலாளி. இவருக்கும், வீடு அருகே குடியிருந்து வரும் சுந்தரம் மகன் குருசாமி (46) க்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று பெருமாள் அவரது குடும்பத்தினருடன் வீட்டு முன்பு பேசிக் கொண்டிருந்தாராம்.அப்போது குருசாமி அவரது மகன்கள் ஒண்டிவீரன், மூர்த்தி ஆகியோர் அரிவாள், கட்டைகளுடன் வந்து தாக்கினார்களாம். இதில் காயமடைந்த பெருமாள் கோவில்பட்டி அரசு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் குறித்து பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. தொழிலாளி மீது தாக்குதல்
தொழிலாளி மீது தாக்குதல்
3. தொழிலாளியை தாக்கிய செங்கல்சூளை உரிமையாளர் உள்பட 4 பேர் கைது
தொழிலாளியை தாக்கிய செங்கல்சூளை உரிமையாளர் உள்பட 4 பேர் கைது