மாவட்ட செய்திகள்

குடியாத்தம் பகுதியில் வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு. வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. + "||" + Rs 15 lakh compensation for farmers

குடியாத்தம் பகுதியில் வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு. வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

குடியாத்தம் பகுதியில்  வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு. வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
குடியாத்தம் பகுதியில் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.15 லட்சம் அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
குடியாத்தம்

வனவிலங்குகளால் பாதிப்பு 

குடியாத்தம் வனச்சரகத்தில் காட்டுயானைகள், சிறுத்தைகள், ஏராளமான புள்ளிமான்கள், காட்டுப்பன்றிகள் உள்ளன. இந்த வன விலங்குகள் விவசாயிகளின் பயிர்களை அவ்வப்போது சேதப்படுத்தி வருகிறது. மேலும் விவசாயிகளின் ஆடு, மாடுகளை, சிறுத்தைகள், யானைகள் தாக்கி கொன்ற சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. 

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி தமிழக முதல்-அமைச்சருக்கும், வனத்துறை அமைச்சருக்கும், மாவட்ட நிர்வாகம், வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துவந்தனர். இதையடுத்து கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் கருணைபிரியா, மாவட்ட வன அலுவலர் பார்க்கவதேஜா, உதவி வனப்பாதுகாவலர் முரளிதரன் ஆகியோர் விவசாயிகளின் பயிர்கள் சேதம் குறித்தும், இழப்பீடு குறித்தும் விவரங்கள் அனுப்பிவைக்குமாறு குடியாத்தம் வனத்துறைக்கு உத்தரவிட்டனர். 

ரூ.15 லட்சம் இழப்பீடு

அதன்பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணபாபு தலைமையில் வனத்துறையினர் விவசாயிகளின் சேதமடைந்த பயிர்கள் விவரம் மற்றும் அவர்களின் ஆடு, மாடுகள் பலியான விவரங்களை உடனடியாக வனத்துறைக்கு அனுப்பி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மனுக்கள் மீது வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்தது. 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டில் பெறப்பட்ட மனுக்களில் ஒரு பகுதியாக 98 விவசாயிகளுக்கு ரூ.15 லட்சத்து 2,700 இழப்பீடாக அவர்களுடைய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் 2020 மற்றும் 2021- ஆம் ஆண்டுகளில் சேதமடைந்த பயிர்களின் விவரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான இழப்பீடு தொகையும் விரைந்து கிடைக்க மாவட்ட வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.