மாவட்ட செய்திகள்

பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து ஆய்வு + "||" + coronatest

பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து ஆய்வு

பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து ஆய்வு
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக மாநகரில் 7 பகுதிகளில் சுகாதாரத்துறையினர் பொதுமக்களிடம் ரத்த மற்றும் சளி மாதிரி சேகரித்தனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக மாநகரில் 7 பகுதிகளில் சுகாதாரத்துறையினர் பொதுமக்களிடம் ரத்த மற்றும் சளி மாதிரி சேகரித்தனர்.
நோய் எதிர்ப்பு சக்தி குறித்து ஆய்வு
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களாக நாள் ஒன்றின் பாதிப்பு 100-ஐ கடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பலரையும் அதிர்ச்சியடைய செய்தது.
இதன் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவிற்கு இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. இதற்காக நேற்று திருப்பூர் மாநகரில் 7 பகுதிகளில் பொதுமக்களிடம் ரத்த மற்றும் சளி மாதிரி மேற்கொள்ளப்பட்டது.
சளி, ரத்த மாதிரி சேகரிப்பு
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் திருப்பூரில் கே.வி.ஆர்.நகர் மற்றும் பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட 7 பகுதிகளில் பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவிற்கு இருக்கிறது? என்பது குறித்து தெரிந்துகொள்ளும் வகையில் சென்னை மற்றும் கோவையில் ஆய்வு நடைபெறுகிறது. இதற்காக பொதுமக்களின் ரத்த மற்றும் சளி மாதிரியை அனுப்பிவைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்படி இந்த மாதிரிகளை சேகரித்து வருகிறோம். 2 நாட்கள் இந்த மாதிரி சேகரிப்பு நடைபெறுகிறது. அதன்படி 210 பேரின் ரத்த மாதிரியும், 50 பேரின் சளி மாதிரியும் சேகரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. இந்த பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் கொரோனாவை அலட்சியமாக நினைக்காமல் அரசு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். அரசு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.