மாவட்ட செய்திகள்

லாரி டிரைவர் வீட்டுக்கு தீ வைப்பு ரூ.1 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம் + "||" + Truck driver home set on fire

லாரி டிரைவர் வீட்டுக்கு தீ வைப்பு ரூ.1 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

லாரி டிரைவர் வீட்டுக்கு தீ வைப்பு ரூ.1 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
சீர்காழியில் குடிபோதையில் லாரி டிரைவர் வீட்டிற்கு வைத்த தீயில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
சீர்காழி:
சீர்காழியில், குடிபோதையில் லாரி டிரைவர் வீட்டிற்கு வைத்த தீயில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
வீட்டிற்கு தீ வைப்பு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்மங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் செல்வமணி (வயது 27). லாரி டிரைவர் இவர், நேற்று முன்தினம் மாலை குடிபோதையில் தனது கூரை வீட்டிற்கு தீ வைத்துள்ளார். தீ மளமளவென்று வீடு முழுவதும் பற்றி எரிந்தது. 
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின்பேரில் சீர்காழி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 
ரூ.1 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
இந்த தீ விபத்தி்ல் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. 
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் விரைந்து வந்து வீட்டிற்கு தீவைத்த செல்வமணியை பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.  இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.