மாவட்ட செய்திகள்

நாகையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 727 வழக்குகளுக்கு தீர்வு + "||" + Settlement of 727 cases in the National People's Court at Nagai

நாகையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 727 வழக்குகளுக்கு தீர்வு

நாகையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 727 வழக்குகளுக்கு தீர்வு
நாகையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 727 வழக்குகளுக்கு தீர்வு ரூ.4 கோடியே 10 லட்சம் வசூல்.
நாகப்பட்டினம், 

நாகை மாவட்ட நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட நீதிபதி செந்தில்குமார் தலைமை தாங்கினார். தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விபத்து காப்பீடு, குடும்ப நல வழக்கு, சிவில் வழக்குகள், நில அபகரிப்பு வழக்குகள், காசோலை வழக்குகள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 727 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.4 கோடியே 10 லட்சத்து 14 ஆயிரத்து 116 வசூல் செய்யப்பட்டது. இதில் கூடுதல் மாவட்ட நீதிபதிகள் தமிழரசி, பன்னீர்செல்வம், சார்பு நீதிபதி ஜெகதீசன், குற்றவியல் நீதிபதிகள் சீனிவாசன், சுரேஷ் கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சுரேஷ்குமார் செய்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. பேச்சுவார்த்தையிலேயே இனி தீர்வு காணலாமே!
விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பு. நாம் பயன்படுத்தும் எல்லா பொருட்களையும் எந்திரம் மூலம் உற்பத்தி செய்துவிடலாம்.
2. மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு!
கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள்.
3. எழும்பூர் கோர்ட்டில் மக்கள் நீதிமன்றம் மூலம் 43 வங்கி கடன் பிரச்சினைக்கு தீர்வு
எழும்பூர் கோர்ட்டில் மக்கள் நீதிமன்றம் மூலம் 43 வங்கி கடன் பிரச்சினைக்கு தீர்வு.
4. தாம்பரம் கோர்ட்டில் லோக் அதாலத் மூலம் 369 வழக்குகளில் தீர்வு
தாம்பரம் கோர்ட்டில் லோக் அதாலத் மூலம் 369 வழக்குகளில் தீர்வு.
5. திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி இணையதளம் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு
திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி இணையதளம் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு.