மாவட்ட செய்திகள்

50 பேருக்கு கொரோனா + "||" + Corona for 50 people

50 பேருக்கு கொரோனா

50 பேருக்கு கொரோனா
இந்தோ-திபெத் எல்லைபாதுகாப்பு படைவீரா் உள்பட 50 பேருக்கு நேற்று சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை, 
இந்தோ-திபெத் எல்லைபாதுகாப்பு படைவீரா் உள்பட 50 பேருக்கு நேற்று சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதிகரிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் நேற்று சிவகங்கையை அடுத்த இலுப்பைகுடியில் உள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் உள்ள வீரா் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 ஏற்கனவே இந்த மையத்தில் உள்ள 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு தற்ேபாது அவர்கள் சிவகங்கை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதுதவிர காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, கோட்டையூர், திருப்பத்தூர், தேவகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 50 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுஉள்ளது.
சிகிச்சை
சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 126 பேர் சிகிச்சையில் இருந்தனர். 
இவர்களில் பூரண குணமடைந்த 15 பேர் நேற்று சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 49,636 ஆக அதிகரித்து உள்ளது.
2. பொள்ளாச்சி பகுதியில் 50 பேருக்கு கொரோனா
பொள்ளாச்சி பகுதியில் 50 பேருக்கு கொரோனா உறுதியானதுடன், பெரியகுயிலியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
3. ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
4. நஞ்சுண்டாபுரத்தில் ஒரே வீதியில் 50 பேருக்கு கொரோனா
கோவை நஞ்சுண்டாபுரத்தில் ஒரே வீதியில் 50 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து ‘சீல்' வைக்கப்பட்டது.