மாவட்ட செய்திகள்

கோடை கரும்பு அறுவடை தொடக்கம் + "||" + Summer cane harvest begins

கோடை கரும்பு அறுவடை தொடக்கம்

கோடை கரும்பு அறுவடை தொடக்கம்
கோடை கரும்பு அறுவடை பணி தொடங்கியது
மேலூர்
மேலூர் பகுதியானது முல்லை பெரியாறு அணை தண்ணீரை நம்பியுள்ள கடைமடை பகுதி பாசனமாகும். இங்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்புகள் பயிரிடப்படும். பொங்கல் பண்டிகைக்காக கரும்புகள் அறுவடை செய்யப்பட்ட நிலையில் கோடை காலத்திற்காக விவசாயிகளால் செங்கரும்புகள் பயிரிடப்பட்டன. அவை தற்போது வெட்டப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது. கோடை கால வெயில் வெப்பத்தை தணிக்க கரும்புச்சாறு தேவைக்கு வியாபாரிகள் மேலூர் பகுதி கரும்புகளை விரும்பி வாங்கிச்செல்கின்றனர். இப்பகுதி கரும்பில் அதிக அளவில் கரும்புச்சாறு கிடைப்பது தனி சிறப்பு. எனவே தென் மாவட்ட வியாபாரிகளால் விவசாயிகளிடம் இருந்து 14 கரும்புகளை கொண்ட 1 கட்டு கரும்பு 300 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது.