மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோருக்கு கொரோனா பரிசோதனை + "||" + Corona test for those involved in vote counting in Kanchipuram

காஞ்சீபுரத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோருக்கு கொரோனா பரிசோதனை

காஞ்சீபுரத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோருக்கு கொரோனா பரிசோதனை
காஞ்சீபுரத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வாக்கு எண்ணும் பணி

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சீபுரம் என 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கான சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ந்தேதி நடந்து முடிந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் காஞ்சீபுரம் பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணி வருகிற 2-ந்தேதி தொடங்குகிறது. 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 706 அரசு ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ளனர்.

கொரோனா பரிசோதனை

வாக்குகளை எண்ணுவதற்காக மையத்துக்குள் செல்லும் அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று கொரோனா பரிசோதனையும், தடுப்பூசி போடும் பணியும் நடந்தது.

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்ட மையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் அருண்மொழி தலைமையில் மருத்துவர்கள் காமாட்சி, ராகவி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். போலீசார் உள்பட அனைத்து துறைகளை சேர்ந்தவர்களும் தானாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இதே மையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் நடந்தது.

காஞ்சீபுரம் செவிலிமேடு அரசு உயர்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணும் போது உடனிருக்க கூடிய கட்சி பிரமுகர்களுக்காக கொரோனா பரிசோதனையும் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்றது.


தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்கத்தில் நேற்று புதிதாக 762 பேருக்கு கொரோனா
மேற்கு வங்கத்தில் தற்போது 7,674 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. கர்நாடகத்தில் நேற்று 775 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
கர்நாடகாவில் தற்போது 13,307 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. அசாமில் இன்று 375 பேருக்கு கொரோனா; 366 பேர் டிஸ்சார்ஜ்
அசாமில் தற்போது 3,314 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.18 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20.84 கோடியாக உயர்ந்துள்ளது.
5. பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.