மாவட்ட செய்திகள்

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு + "||" + Assignment of work

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கரூர்
பணி ஒதுக்கீடு
கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்து, வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நாளைமறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதையடுத்து தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி நேற்று கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதற்கு குளித்தலை சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் பார்வையாளர் அவயகுமார் நாயக், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரசாந்த் மு.வடநேரே ஆகியோர் தலைமை தாங்கினர்.
அரவக்குறிச்சி 
இதில், அரவக்குறிச்சி சட்டமன்றத்தொகுதியில் 310 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு ஒரு வாக்கு எண்ணும் அறையில் 10 மேஜைகள் அமைக்கப்பட்டு மொத்தம் 31 சுற்றுகள் எண்ணப்பட உள்ளது. இவ்வாக்கு எண்ணும் பணியில் 24 மேற்பார்வையாளர்களும், 24 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்களும், 24 நுண்பார்வையாளர்களும் என மொத்தம் 72 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.
கரூர் 
கரூர் சட்டமன்றத்தொகுதியில் 355 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு 2 வாக்கு எண்ணும் அறைகளில் தலா 10 மேஜைகள் வீதம் மொத்தம் 20 மேஜைகள் அமைக்கப்பட்டு 18 சுற்றுகளாக வாக்கு எண்ணப்பட உள்ளது. கரூர் தொகுதிக்கான வாக்குகளை எண்ணும் பணியில் 48 மேற்பார்வையாளர்களும், 48 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்களும், 48 நுண்பார்வையாளர்களும் என மொத்தம் 144 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.  
கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்றத்தொகுதியில் 297 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு ஒரு வாக்கு எண்ணும் அறையில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு மொத்தம் 22 சுற்றுகள் எண்ணப்பப்பட உள்ளது. கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் பணியில் 17 மேற்பார்வையாளர்களும்,  17 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்களும், 17 நுண்பார்வையாளர்களும் என மொத்தம் 51 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். 
குளித்தலை 
குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 312 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு ஒரு வாக்கு எண்ணும் அறையில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு மொத்தம் 23 சுற்றுகள் வாக்கு எண்ணப்பட உள்ளது. குளித்தலை சட்டமன்றத்தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணியில் 17 மேற்பார்வையாளர்களும்,  17 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்களும், 17 நுண்பார்வையாளர்களும் என மொத்தம் 51 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். 
318 அலுவலர்கள்
கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள 106 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், 106 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள், 106 வாக்கு எண்ணிக்கை நுண்பார்வையாளர்கள் என மொத்தம் 318 அலுவலர்களுக்கான கணினி முறை குலுக்கல் பணி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
இதில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஷாஜகான், வட்டாட்சியர் (தேர்தல் பிரிவு) பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 11,376 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு
7 சட்டமன்ற தொகுதிகளுக்கு 11,376 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடந்தது.