மாவட்ட செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 644 பேருக்கு கொரோனா + "||" + Corona for 644 people in Nellai district

நெல்லை மாவட்டத்தில் 644 பேருக்கு கொரோனா

நெல்லை மாவட்டத்தில் 644 பேருக்கு கொரோனா
நெல்லை மாவட்டத்தில் 644 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நெல்லை, மே:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 644 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், டாக்டர்கள் மற்றும் 15 பத்திரிகையாளர்களும் அடங்குவர். 
இவர்களுடன் சேர்த்து நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24 ஆயிரத்து 597 ஆக உயர்ந்துள்ளது. இதில் சிகிச்சையால் குணமடைந்து 19 ஆயிரத்து 736 பேர் வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 422 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 4 ஆயிரத்து 627 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 234 பேர் பலியாகி உள்ளனர்.