மாவட்ட செய்திகள்

ஒட்டன்சத்திரத்தில் தங்கும் விடுதியில் ஜவுளிக்கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Textile shop employee commits suicide by hanging

ஒட்டன்சத்திரத்தில் தங்கும் விடுதியில் ஜவுளிக்கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

ஒட்டன்சத்திரத்தில் தங்கும் விடுதியில் ஜவுளிக்கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
ஒட்டன்சத்திரத்தில் தங்கும் விடுதியில் ஜவுளிக்கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஒட்டன்சத்திரம்:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 29). இவர் ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஜவுளிக் கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இதற்காக அவர் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி ஜவுளிக்கடை வேலைக்கு சென்று வந்தார். இந்தநிலையில் ரஞ்சித்குமார் கடந்த 3 நாட்களாக வேலைக்கு வராமல் இருந்துள்ளார். இதற்கிடையே அவர் தங்கியிருந்த விடுதி அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. 
இதையடுத்து விடுதி ஊழியர்கள், ரஞ்சித்குமார் தங்கியிருந்த அறையை திறந்து பார்த்தனர். அப்போது அவர் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். இதுகுறித்து உடனடியாக ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரஞ்சித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரஞ்சித்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இருப்பினும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.