மாவட்ட செய்திகள்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு + "||" + Collector inspection

வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு
விருதுநகரில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் கண்ணன் ஆய்வு செய்தார்.
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றதொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை விருதுநகர் - சிவகாசி சாலையில் உள்ள ஸ்ரீவித்யா கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற உள்ளது. இங்கு தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள வாக்களிக்கும் அறையில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு ள்ளதை உறுதி செய்யும் வகையில் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் முன்னிலையில் கலெக்டர் கண்ணன் ஆய்வு செய்தார். 
மேலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை  உறுதி செய்யும் வகையில் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன்,  சிவகாசி  சப்-கலெக்டர் தினேஷ்குமார் மற்றும் அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் போலீசார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கோபியில் கொரோனா சிகிச்சை மையங்களில் கலெக்டர் ஆய்வு
கோபியில் கொரோனா சிகிச்சை மையங்களில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
2. 7 ஆண்டாக பணி முடியாமல் உள்ள தாலுகா அலுவலக கட்டிடத்தில் கலெக்டர் ஆய்வு
7 ஆண்டாக பணி முடியாமல் உள்ள தாலுகா அலுவலக கட்டிடத்தில் கலெக்டர் ஆய்வு
3. கலெக்டர் சமீரன் நேரில் ஆய்வு
வால்பாறையில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி முகாமை கலெக்டர் சமீரன் நேரில் ஆய்வு செய்தார். பொதுமக்கள் ஒத்துழைத் தால் கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என அவர் கூறினார்.
4. வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் ஒருவாரத்தில் முடிக்கப்படும் மாவட்ட கலெக்டர் தகவல்
கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்று நீர்வழித்தடங்களில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் ஒருவாரத்தில் முடிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கூறினார்.
5. ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு
விருதுநகரில் ரேஷன் கடைகளில் கலெக்டர் மேகநாத ரெட்டி ஆய்வு மேற்கொண்டார்.