மாவட்ட செய்திகள்

மைசூரு மாநகராட்சி பட்ஜெட் ரூ.987 கோடியில் தாக்கல் + "||" + mysore corporation budget

மைசூரு மாநகராட்சி பட்ஜெட் ரூ.987 கோடியில் தாக்கல்

மைசூரு மாநகராட்சி பட்ஜெட் ரூ.987 கோடியில் தாக்கல்
2021-22-ம் நிதி ஆண்டுக்கான மைசூரு மாநகராட்சி பட்ஜெட் ரூ.987 கோடியில் தாக்கல் செய்யப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக புதிய வரிகள் விதிக்கப்படவில்லை.
மைசூரு: 2021-22-ம் நிதி ஆண்டுக்கான மைசூரு மாநகராட்சி பட்ஜெட் ரூ.987 கோடியில் தாக்கல் செய்யப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக புதிய வரிகள் விதிக்கப்படவில்லை.

மைசூரு மாநகராட்சி பட்ஜெட்

மைசூரு மாநகராட்சியின் 2021-22-ம் நிதி ஆண்டின் பட்ஜெட் நேற்றுமுன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு மைசூரு மாநகராட்சி பட்ஜெட் ஆன்லைனில் நடந்தது. 

மைசூரு மாநகராட்சி தலைைம அலுவலகத்தில் நடந்த பட்ஜெட் தாக்கலில் மேயர் ருக்மணி மாதேகவுடா, துணை மேயர் அன்வர் பெய்க், மாநகராட்சி கமிஷனர் ஷில்பா நாகு உள்ளிட்டார் கலந்து கொண்டனர். நிதி தலைவர் ஷோபா, 2021-22-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசித்து காட்டினார். 

 ரூ.987 கோடியில் தாக்கல்

அதில் மைசூரு மாநகராட்சி பட்ஜெட் ரூ.987.68 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்டது. செலவுக்கு ரூ.981.55 கோடியும், ரூ.6.13 கோடி சேமிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதாவது சொத்து உள்ளிட்ட வரிகள், பத்திரம் மாற்றம் மற்றும் வளர்ச்சி பணிகளில் இருந்து ரூ.6.13 கோடி சேமிக்கப்படுகிறது. 

கொரோனா பரவலால் மைசூரு மக்கள் அவதிப்படுவதால் பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. மைசூருவில் மாநராட்சி பட்ஜெட்டில் முக்கிய வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்த விவரம் பின்வருமாறு:-

பிளாஸ்டிக் பொருட்களால் வாகனங்களுக்கான எரிபொருள் தயாரிக்கும் மையம் அமைக்க ரூ.1 கோடி, விளையாட்டு மைதானங்களை மேம்படுத்த ரூ.1 கோடி, சர்க்கிள்களின் பராமரிப்புக்கு ரூ.10 கோடி, குண்டும்-குழியுமான சாலைகளை சீரமைக்க ரூ.3 கோடி, பூங்காக்களை பராமரிப்பதற்கு ரூ.14 கோடி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி ஏழை மக்கள், கொரோனா முன்களபணியாளர்களின் மருத்துவ சிகிச்சை, உதவி தொகை உள்ளிட்டவைகளுக்கும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.