மாவட்ட செய்திகள்

நாகுடி துணை மின் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை + "||" + Public siege of the substation

நாகுடி துணை மின் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

நாகுடி துணை மின் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
நாகுடி துணை மின் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
அறந்தாங்கி
 ஆவுடையார்கோவில் தாலுகா எட்டிச்சேரி, சிறுகவயல் ஆகிய இடங்களில் உள்ள மின்மாற்றிகள் பழுதாகி 2 மாதங்கள் ஆகியும் பழுது நீக்கப்படவில்லை. இதுகுறித்து நாகுடி துணை மின்நிலையத்தில் புகார் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மின்மாற்றிகளில் உள்ள பழுதை சரிசெய்யக்கோரி நேற்று நாகுடி துணை மின்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் துணை மின் நிலைய உதவிபொறியாளர் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.