மாவட்ட செய்திகள்

வண்டலூர் மேம்பாலம் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் பலி; மற்றொருவர் காயம் + "||" + A policeman was killed when his motorcycle collided with a retaining wall near the Vandalur flyover

வண்டலூர் மேம்பாலம் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் பலி; மற்றொருவர் காயம்

வண்டலூர் மேம்பாலம் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் பலி; மற்றொருவர் காயம்
வண்டலூர் மேம்பாலம் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் பலியானார்.

மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்தனர்

சேலம் மாவட்டம் சின்ன கல்வராயன் மலை அருகே உள்ள கோவில் காடு கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 31), இவர் சென்னை மாநகர காவல் துறையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர், பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 32). இவரும் சென்னை மாநகர காவல் துறையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.

நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சேலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். வண்டலூர் மேம்பாலம் அருகே வரும்போது மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர்.

சாவு

இதில் பலத்த காயம் அடைந்த ராமச்சந்திரன், லேசான காயம் அடைந்த சக்திவேல் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராமச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சக்திவேல் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 


தொடர்புடைய செய்திகள்

1. சிறுவன், கர்ப்பிணி உள்பட 4 பேர் பலி
சிவகாசி அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில் சிறுவன், கர்ப்பிணி உள்பட 4 பேர் பலியாகினர்.
2. சாலையில் கிடந்த மரக்கட்டையில் மொபட் மோதி முறுக்கு வியாபாரி பலி
சாலையில் கிடந்த மரக்கட்டையில் மொபட் மோதி முறுக்கு வியாபாரி பலியானார்.
3. கொரோனாவுக்கு பெண் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் பலியானார். மேலும் புதிதாக 172 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
4. மோட்டார் சைக்கிள் மோதி டெய்லர் பலி
மோட்டார் சைக்கிள் மோதி டெய்லர் பலி
5. கரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மெக்கானிக் கடை உரிமையாளர் பலி
கரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மெக்கானிக் கடை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.