மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிப்பு: கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 905 பேர் பாதிப்பு; 7 பேர் உயிரிழந்தனர் + "||" + Continuing increase in Tiruvallur district: 905 people infected with corona infection in a single day; 7 people were killed

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிப்பு: கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 905 பேர் பாதிப்பு; 7 பேர் உயிரிழந்தனர்

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிப்பு: கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 905 பேர் பாதிப்பு; 7 பேர் உயிரிழந்தனர்
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொடர் அதிகரிப்பால், கொரோனா தொற்றுக்கு நேற்று 905 பேர் பாதிக்கப்பட்டனர்.

905 பேருக்கு கொரோனா

கொரோனா வைரசின் 2-வது அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, கோவைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த 10 நாட்களாக 600-க்கும் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 905 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

7 பேர் பலி

இதுவரையில் மாவட்டம் முழுவதும் 59 ஆயிரத்து 702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 53 ஆயிரத்து 345 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 5 ஆயிரத்து 564 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 7 பேர் இறந்து உள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 793 ஆக உயர்ந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் 91 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலையின் வேகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
2. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.95 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16.41 கோடியை தாண்டியுள்ளது.
3. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 5 பேர் பலி; 204 பேர் வைரசால் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் 5 பேர் பலியாகினர். 204 பேர் வைரசால் பாதிக்கப்பட்டனர்.
4. காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்க வட்டார அளவில் கட்டுப்பாட்டு அறை எண்கள்: கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.92 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16.37 கோடியை தாண்டியுள்ளது.