மாவட்ட செய்திகள்

கணவரை விட்டு பிரிய மறுத்ததால் கள்ளக்காதலியின் குழந்தையை கடத்தியவர் கைது + "||" + The child of a false girlfriend The kidnapper was arrested

கணவரை விட்டு பிரிய மறுத்ததால் கள்ளக்காதலியின் குழந்தையை கடத்தியவர் கைது

கணவரை விட்டு பிரிய மறுத்ததால் கள்ளக்காதலியின் குழந்தையை கடத்தியவர் கைது
கணவரை விட்டு பிரிந்து தன்னுடன் வர மறுத்த கள்ளக்காதலியின் 3 வயது மகளை கடத்தி சென்ற கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
அம்பர்நாத், 

தானே மாவட்டம் டோம்பிவிலி கிழக்கு மான்பாடா பகுதியை சேர்ந்தவர் தினேஷ் திவாரி(வயது42). இவருக்கு அதே பகுதியை சே்ாந்த திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இதுபற்றி அறிந்த அப்பெண்ணின் கணவர் கண்டித்து உள்ளார். இதனால் கணவர் மீது வெறுப்படைந்த அப்பெண் தனது மகளுடன் தினேஷ் திவாரியின் வீட்டிற்கு சென்று குடும்பம் நடத்தி வந்தார்.

சில நாட்களில் தினேஷ் திவாரிக்கும், அப்பெண்ணிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கிருந்து மீண்டும் கணவர் வீட்டிற்கு வந்து மன்னிப்பு கேட்டு உள்ளார். இதனால் கணவர் மன்னித்து மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்தநிலையில் சில நாள் கழித்து தினேஷ் திவாரி அப்பெண்ணை சந்தித்து தன்னுடன் வந்து தங்கும்படி தெரிவித்தார். இதற்கு அப்பெண் மறுத்ததால், 3 வயதுடைய சிறுமியை தினேஷ் திவாரி கடத்தி கொண்டு சென்றார். இதனால் அப்பெண் மான்பாடா போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பத்லாப்பூரில் பதுங்கி இருந்த தினேஷ் திவாரியை பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் கடத்தி சென்ற சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.