மாவட்ட செய்திகள்

கயத்தாறு அருகே4 பேருக்கு அரிவாள் வெட்டு + "||" + Sickle cut for 4 people

கயத்தாறு அருகே4 பேருக்கு அரிவாள் வெட்டு

கயத்தாறு அருகே4 பேருக்கு அரிவாள் வெட்டு
கயத்தாறு அருகே 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
கயத்தாறு:
கயத்தாறு அருகே 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக வியாபாரி கைது செய்யப்பட்டார். 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

4 பேருக்கு வெட்டு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ளது பன்னீர்குளம் கிராமம். சம்பவத்தன்று இரவில் பன்னீர்குளத்தை சேர்ந்த உலகையா (வயது 37), ராமகிருஷ்ணன் (41), தங்கத்துரை (37), விருதுநகரைச் சேர்ந்த கருப்பையா (58) ஆகிய 4 பேர் ஊரில் நின்று பேசிக் கொண்டு இருந்தனர்.

அப்போது, அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த ராமர், அவரது மகன்கள் மாரியப்பன், சுடலை, கருப்பசாமி ஆகிய 4 பேரும் சேர்ந்து உலகையா உள்பட 4 பேரையும் அரிவாளால் பல்வேறு இடங்களில் வெட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அங்கு இருந்து தப்பி சென்று விட்டனர். 

இதுகுறித்து உடனடியாக கயத்தாறு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் ஹரிக்கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாைளயங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ஆடு வியாபாரி கைது

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆடு வியாபாரியான மாரியப்பன் (35) என்பவரை ஒட்டநத்தம் அருகே கைது செய்தனர். அவரை கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அரிவாள் வெட்டுக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லையில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.