மாவட்ட செய்திகள்

முககவசம் அணியாத 367 பேர் மீது போலீசார் நடவடிக்கைரூ.73 ஆயிரம் அபராதம் விதிப்பு + "||" + 367 people who did not wear a mask Police action

முககவசம் அணியாத 367 பேர் மீது போலீசார் நடவடிக்கைரூ.73 ஆயிரம் அபராதம் விதிப்பு

முககவசம் அணியாத 367 பேர் மீது போலீசார் நடவடிக்கைரூ.73 ஆயிரம் அபராதம் விதிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் முககவசம் அணியாத 367 பேர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அவர்களுக்கு ரூ.73 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் முககவசம் அணியாத 367 பேர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அவர்களுக்கு ரூ.73 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதம் விதிப்பு

கொரோனா வைரஸ் பரவல் 2-ம் கட்டமாக அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் முககவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ.200 ‌அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூ.500 அபராதமும் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் பொது இடங்களில் முககவசம் அணியாத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 32 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 11 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 41 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 14 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 76 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 109 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 63 பேர் மீதும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 21 பேர் என மொத்தம் 367 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதாவது அவர்களிடமிருந்து தலா ரூ.200 வீதம் ரூ.73 ஆயிரத்து 400 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

சமூகஇடைவெளி

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில்  ஸ்ரீவைகுண்டம் கோட்டத்தில் 2 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் ஒருவர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 2 பேர் என சமூக இடைவெளி கடைப்பிடிக்காத 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.2 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டது.