மாவட்ட செய்திகள்

வேறு கிராமத்திற்கு குடிநீர் கொண்டு செல்ல கிராம மக்கள் எதிர்ப்பு + "||" + Resistance

வேறு கிராமத்திற்கு குடிநீர் கொண்டு செல்ல கிராம மக்கள் எதிர்ப்பு

வேறு கிராமத்திற்கு குடிநீர் கொண்டு செல்ல கிராம மக்கள் எதிர்ப்பு
தேவகோட்டை அருகே வேறு கிராமத்துக்கு குடிநீர் கொண்டு செல்ல கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தேவகோட்டை,

தேவகோட்டையை அடுத்த சருகணி அருகே உள்ள செங்கற்கோவில் கிராமத்தில் நல்ல நீர் வளம் உள்ளது. .இந்த கிராமத்திலிருந்து மேலும் பல்வேறு கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பகுதியில் மிகவும் ஆழமான அளவில் கிராவல் மண் எடுத்ததால் வறட்சிக்கு இலக்காகி நீரின் அளவு குறைந்து போயுள்ளது.இந்நிலையில் இந்த கிராமத்தில் இருந்து கல்லங்குடி ஊராட்சிக்கு குடிநீர் எடுத்துச் செல்ல ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு செயல்பட தொடங்கியது.இந்நிலையில் அந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு இங்கு இனிமேல் வேறு கிராமங்களுக்கு குடிநீர் எடுத்துச் செல்லக்கூடாது எங்கள் கிராமத்தில் நீர்வளம் கேள்விக்குறியாகிவிடும் என குற்றம்சாட்டி ஆழ்துளை கிணறு அமைப்பதை தடுத்து நிறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் அந்த பணியை நிறுத்தி வைத்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் இறந்த பெண் உடலை ஊருக்குள் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு
சிங்கம்புணரி அருகே கொரோனாவால் இறந்த பெண்ணின் உடலை ஊருக்குள் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் சாலை மறியல் செய்தனர்
2. கொரோனா சிகிச்சை மையம் அமைக்க எதிர்ப்பு
கொரோனா சிகிச்சை மையம் அமைக்க எதிர்ப்பு
3. விடுமுறை நாட்களிலும் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்-பெற்றோர் கடும் எதிர்ப்பு
மதுரை மாவட்டத்தில் விடுமுறை நாட்களிலும் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
4. வேளாண் சட்டங்கள் எதிர்ப்பு; திக்ரி எல்லையில் அரை நிர்வாண போராட்டத்தில் விவசாயிகள்
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திக்ரி எல்லையில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.