மாவட்ட செய்திகள்

மே தின கொடியேற்று விழா + "||" + May Day Flag Ceremony

மே தின கொடியேற்று விழா

மே தின கொடியேற்று விழா
செங்கோட்டையில் மே தின கொடியேற்று விழா நடந்தது.
செங்கோட்டை, மே:
செங்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மே தினம் கொடியேற்று விழா மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் விழா நடைபெற்றது. கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு மாவட்டக்குழு உறுப்பினர் வன்னிய பெருமாள் தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் வேலுமயில் கொடியேற்றினார். செங்கோட்டை அரசு மருத்துவமனை சித்தா மருத்துவர் டாக்டர் கலா கபசுர குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்டக்குழு உறுப்பினர் பால்ராஜ், ஆயிஷா, மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள் முருகன், சின்னச்சாமி, பரமசிவன், முருகேசன் மற்றும் கிளை செயலாளர் சேட், போக்குவரத்து தொழிலாளர்கள் ஜாகீர் உசேன், சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.