மாவட்ட செய்திகள்

தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நுங்கு, பதநீர் + "||" + DMK On behalf of the public Nungu- Pathanir

தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நுங்கு, பதநீர்

தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நுங்கு, பதநீர்
தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நுங்கு, பதநீர் வழங்கப்பட்டது.
பாவூர்சத்திரம், மே:
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க., கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. ஆகியவை சார்பில், பொதுமக்களுக்கு கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாக பதநீர் மற்றும் நுங்கு வழங்கும் நிகழ்ச்சி பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நுங்கு மற்றும் பதநீர் வழங்கினார். நிகழ்ச்சியில் கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சீனிதுரை, கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெகதீசன், மாவட்ட அணி நிர்வாகிகள் கபில்தேவதாஸ், செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.