மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்: என்ஜினீயரிங் மாணவர் உள்பட 3 பேர் பலிகாவேரிப்பட்டணம் அருகே சோகம் + "||" + engineer died

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்: என்ஜினீயரிங் மாணவர் உள்பட 3 பேர் பலிகாவேரிப்பட்டணம் அருகே சோகம்

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்: என்ஜினீயரிங் மாணவர் உள்பட 3 பேர் பலிகாவேரிப்பட்டணம் அருகே சோகம்
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்: என்ஜினீயரிங் மாணவர் உள்பட 3 பேர் பலி காவேரிப்பட்டணம் அருகே சோகம்
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் உள்பட 3 பேர் பலியானார்கள்.
என்ஜினீயரிங் மாணவர்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருேக உள்ள கீழ் ெகாள்ளுப்பட்டியை சேர்ந்தவர் சேட்டு. இவருடைய மகன் கஸ்தூரிராஜன் (வயது 16). அதே பகுதியில் உள்ள நடுகொள்ளுப்பட்டி பகுதிைய சேர்ந்தவர் மற்றொரு சேட்டு. இவருடைய மகன் வெற்றிச்செல்வன் (18). சவூளூர் கொள்ளுப்பட்டியை சேர்ந்த சண்முகம் மகன் சச்சின் (16). நண்பர்களான இவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார்சைக்கிளில் கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் சென்று விட்டு காரிமங்கலம் நோக்கி நேற்று இரவு வந்து கொண்டிருந்தனர். 
அதேபோல காவேரிப்பட்டணம் அருகே உள்ள வாடமங்கலத்தை சேர்ந்தவர் அரவிந்த் (19). பி.இ. என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது பாட்டி சந்திரா (60) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் தட்டரஅள்ளியில் இருந்து பண்ணந்தூர் ேநாக்கி சென்று கொண்டிருந்தார்.
3 பேர் பலி
காவேரிப்பட்டணம் அருகே ெஜவீரஅள்ளி முருகன் கோவில் பகுதியில் வந்தபோது அரவிந்த் சென்ற மோட்டார்சைக்கிள் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிரே கஸ்தூரிராஜன் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த கஸ்தூரிராஜன், அரவிந்த் மற்றும் சந்திரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். 
விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு கொண்டிருந்த சச்சின், வெற்றிசெல்வன் ஆகியோரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுயில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
========

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் பறக்கும் படை குழுவினருடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டவர்: மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதல்; போலீஸ்காரர் பலி
தேர்தல் பறக்கும் படை குழுவினருடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர் ஒருவர், மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் பரிதாபமாக இறந்தார்.