மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா தொற்றால் ஒரே நாளில் 779 பேர் பாதிப்பு - 14 பேர் பலி + "||" + In Tiruvallur district, corona infection has affected 779 people in a single day - killing 14 people

திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா தொற்றால் ஒரே நாளில் 779 பேர் பாதிப்பு - 14 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா தொற்றால் ஒரே நாளில் 779 பேர் பாதிப்பு - 14 பேர் பலி
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 779 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். 14 பேர் பலியானார்கள்.்
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 779 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 60 ஆயிரத்து 371 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 54 ஆயிரத்து 179 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 5 ஆயிரத்து 385 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 807 பேர் கொரோனா ெதாற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 14 பேர் இறந்துள்ளனர்.