மாவட்ட செய்திகள்

ஓட்டப்பிடாரம் தொகுதியில்தி.மு.க. மீண்டும் வெற்றி + "||" + dmk in ottapidaram constituency win again

ஓட்டப்பிடாரம் தொகுதியில்தி.மு.க. மீண்டும் வெற்றி

ஓட்டப்பிடாரம் தொகுதியில்தி.மு.க. மீண்டும் வெற்றி
ஓட்டப்பிடாரம் தொகுதியில் தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்றது.
தூத்துக்குடி:
ஓட்டப்பிடாரம் தொகுதியில் தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. 
ஓட்டப்பிடாரம் தொகுதி
ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 50 ஆயிரத்து 717 பேரில், 1 லட்சத்து 76 ஆயிரத்து 272 பேர் வாக்களித்தனர். 
ஓட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் பெ.மோகன், தி.மு.க. சார்பில் எம்.சி.சண்முகையா, அ.ம.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் ச.ஆறுமுகநயினார், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் ர.அருணாதேவி, நாம் தமிழர் கட்சி சார்பில் மு.வைகுண்டமாரி உள்பட 17 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தனர். இறுதியில் தி.மு.க. வேட்பாளர் சண்முகையா 73 ஆயிரத்து 110 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் மோகனுக்கு 64 ஆயிரத்து 600 வாக்குகள் கிடைத்தன. 
இந்த தொகுதியில் கடந்த முறை தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சண்முகையா வெற்றி பெற்று இருந்தார். தற்போது அவர் மீண்டும் வெற்றி பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குகள்
ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
1. எம்.சி.சண்முகையா
(தி.மு.க.)- 73,110
2. பெ.மோகன்
(அ.தி.மு.க.)- 64,600
3. மு.வைகுண்டமாரி 
(நாம் தமிழர் கட்சி)- 22,413
4. டாக்டர் க.கிருஷ்ணசாமி 
(புதிய தமிழகம்)- 6,544
5. ச.ஆறுமுகநயினார்
(தே.மு.தி.க.)- 5,327
6. ர.அருணாதேவி (இந்திய ஜனநாயக கட்சி)-        1,913
7. பா.முருகன்
(நாம் இந்தியர் கட்சி)- 520
8. பெ.சமுத்திரம் (சுயே)- 399 
9. ம.அ.தர்மர்    (சுயே)- 320
10. வே.ராஜ்      (சுயே)- 316
11. ஆ.மகாராஜன் (பகுஜன் திராவிட கட்சி)-            157
12. பொ.இளம்பிறை மணிமாறன்                (சுயே)- 152
13. செ.சசிமுருகன்
(சுயே)- 133
14. கா.குணசேகரன்
 (சுயே)- 100
15. சு.வேல்முருகன் 
(சுயே)- 98
16. சா.கருப்பராஜா
(சுயே)- 86
17. மு.கணேஷ்குமார் 
(சுயே)- 84
18. நோட்டா -            1,568