மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலி + "||" + 3 more killed in Perambalur to Corona

பெரம்பலூரில் மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலி

பெரம்பலூரில் மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 29 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,702 ஆக உயர்ந்துள்ளது. இதில் 24 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு பெரம்பலூர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 56 வயது பெண்ணும், பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 65 வயதுடைய பெண்ணும், 47 வயதுடைய ஆண் ஒருவரும் என 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 2,462 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 213 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 310 பேர் பாதிப்பு 9 பேர் உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 310 பேர் பாதிக்கப்பட்டனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
2. தமிழகத்தில் 7,427 பேருக்கு தொற்று: 28 மாவட்டங்களில் 200-க்கும் கீழ் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் நேற்று 7,427 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 28 மாவட்டங்களில் 200-க்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.
3. கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.
4. புதிதாக 106 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 106 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர்.
5. கரூர் மாவட்டத்தில் புதிதாக 101 பேருக்கு கொரோனா தொற்று
கரூர் மாவட்டத்தில் புதிதாக 101 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.