மாவட்ட செய்திகள்

முக்கூடல் பகுதியில் பலத்த மழை; மின்னல் தாக்கி தென்னை மரம் தீப்பிடித்தது + "||" + Heavy rain in the triangular area; Lightning struck and the coconut tree caught fire

முக்கூடல் பகுதியில் பலத்த மழை; மின்னல் தாக்கி தென்னை மரம் தீப்பிடித்தது

முக்கூடல் பகுதியில் பலத்த மழை; மின்னல் தாக்கி தென்னை மரம் தீப்பிடித்தது
முக்கூடல் பகுதியில் பலத்த மழை பெய்தது. மின்னல் தாக்கி தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது.
முக்கூடல், மே:
முக்கூடலில் நேற்று காலை முதல் மாலை 4 மணி வரை கோடை வெயில் வாட்டி வதைத்தது. ஆனால் 4 மணிக்கு பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனை தொடர்ந்து இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. முக்கூடல் அருகே உள்ள சடையபுரத்தில் இடி மின்னல் தாக்கியதில் பனை மரம் தீப்பற்றி எரிந்தது.
இதேபோல் பாப்பாக்குடி, செங்குளம், கபாலிபாறை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக காணப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருக்கோவிலூர் அருகே மின்னல் தாக்கி தென்னைமரம் தீப்பிடித்து எரிந்தது
திருக்கோவிலூர் அருகே மின்னல் தாக்கி தென்னைமரம் தீப்பிடித்து எரிந்தது