மாவட்ட செய்திகள்

அம்பை தொகுதியை மீண்டும் கைப்பற்றி அ.தி.மு.க. + "||" + The AIADMK recaptured the Ambasamudram constituency.

அம்பை தொகுதியை மீண்டும் கைப்பற்றி அ.தி.மு.க.

அம்பை தொகுதியை மீண்டும் கைப்பற்றி அ.தி.மு.க.
அம்பாசமுத்திரம் தொகுதியை அ.தி.மு.க. மீண்டும் கைப்பற்றியது.
அம்பை, மே:
அம்பை தொகுதியை அ.தி.மு.க. மீண்டும் கைப்பற்றியது.

அம்பை சட்டசபை தொகுதி

அம்பை சட்டசபை தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 658 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 77 ஆயிரத்து 988 வாக்குகள் பதிவாகின. அதாவது 72.05 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்த ெதாகுதியில் அ.தி.மு.க. சார்பில் இசக்கி சுப்பையா, தி.மு.க. சார்பில் ஆவுடையப்பன் உள்பட 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 
நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. ஆரம்பத்தில் இருந்தே அ.தி.மு.க. வேட்பாளர் இசக்கி சுப்பையா முன்னிலை வகித்து வந்தார். இறுதியில் அவர் 85 ஆயிரத்து 211 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஆவுடையப்பன் 68 ஆயிரத்து 296 வாக்குகள் பெற்றார். 

வாக்கு விவரம்
அம்பை தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
இசக்கி சுப்பையா (அ.தி.மு.க.) - 85,211.  ஆவுடையப்பன் (தி.மு.க.) - 68,296. செண்பகவள்ளி (நாம் தமிழர் கட்சி) -13,735. ராணி ரஞ்சிதம் (அ.ம.மு.க.) - 4,194.
செங்குளம் கணேசன் (ச.ம.க.) - 2,807. மணிமாறன் (பகுஜன் சமாஜ் கட்சி) - 509.
ராஜேஷ் தர்மசிங் பாண்டியன் (சுயே.) - 380. கவாஸ்கர் (சுயே.) - 315. லட்சுமணன் (வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி) - 178. கணேசன் (சுயே.) - 166. அருணாசலம் (சுயே.) - 119. அப்துல் மஜீத் (சுயே.) - 88. நோட்டா-    1673/
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அம்பை தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அதேபோல் இந்த தேர்தலிலும் அம்பை தொகுதியில் அ.தி.மு.க வெற்றி பெற்று தொகுதியை மீண்டும் கைப்பற்றியது.