மாவட்ட செய்திகள்

காரில் கடத்தி சென்று விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை டீக்கடை ஊழியர் கைது + "||" + Go kidnapping in the car To the widow Sexual harassment Tea shop employee arrested

காரில் கடத்தி சென்று விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை டீக்கடை ஊழியர் கைது

காரில் கடத்தி சென்று விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை டீக்கடை ஊழியர் கைது
‘திருமணமாகி கணவனை இழந்த 35 வயதுடைய தனது சகோதரியை காணவில்லை' என்று போலீசில் புகார் அளித்திருந்தார்.
சென்னை, 

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், ‘திருமணமாகி கணவனை இழந்த 35 வயதுடைய தனது சகோதரியை காணவில்லை' என்று போலீசில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில், அந்த பெண்ணை காரில் ஒருவர் வலுக்கட்டாயமாக ஏற்றி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், விதவை பெண்ணை காரில் ஏற்றி சென்றது அதே பகுதியில் டீக்கடையில் வேலை பார்க்கும் அண்ணாநகர் கீழ்நடுவங்கரை பஜனை கோவில் தெருவை சேர்ந்த சக்திவேல் (வயது 41) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை மீட்டு சக்திவேலை பிடித்து விசாரித்தனர். இதில், சக்திவேல் அந்த பெண்ணை ஏமாற்றி காரில் அழைத்து சென்று, மறைமுகமான இடத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.