மாவட்ட செய்திகள்

நீலகிரியில் 86 பேருக்கு கொரோனா + "||" + Corona for 86 people in the Nilgiris

நீலகிரியில் 86 பேருக்கு கொரோனா

நீலகிரியில் 86 பேருக்கு கொரோனா
நீலகிரியில் 86 பேருக்கு கொரோனா
ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 9 ஆயிரத்து 910 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. மேலும் 88 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 996 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 9 ஆயிரத்து 529 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனாவால் 51 பேர் இறந்தனர். மீதமுள்ள 416 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.