மாவட்ட செய்திகள்

வீடுகளை முற்றுகையிட்ட காட்டுயானைகள் + "||" + Wild elephants besieging houses

வீடுகளை முற்றுகையிட்ட காட்டுயானைகள்

வீடுகளை முற்றுகையிட்ட காட்டுயானைகள்
கொளப்பள்ளி அருகே வீடுகளை முற்றுகையிட்ட காட்டுயானைகளால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
கோத்தகிரி

கொளப்பள்ளி அருகே வீடுகளை முற்றுகையிட்ட காட்டுயானைகளால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

காட்டுயானைகள் நடமாட்டம்

கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை, தட்டப்பள்ளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக சமவெளி பகுதிகளில் இருந்து காட்டுயானைகள் இடம்பெயர்ந்து வருகின்றன. இதனால் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் காட்டுயானை ஒன்று கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையின் நடுவே நடந்து சென்றது. இதை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் கண்டு பீதி அடைந்தனர்.

தொடர்ந்து சற்று தொலைவிலேயே தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு காத்திருந்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறிது நேரம் சாலையில் உலா வந்த காட்டுயானை, அதன்பிறகு வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின்னர் போக்குவரத்து சீரானது.

வீடுகள் முற்றுகை

இதேபோன்று பந்தலூர் தாலுகாவில் உள்ள கொளப்பள்ளி அருகே அம்மன்காவு பகுதியில் நேற்று மாலை 5.30 மணியளவில் 7 காட்டுயானைகள் புகுந்தன. மேலும் பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். 

இதுகுறித்து பிதிர்காடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனச்சரகர் மனோகரன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து காட்டுயானைகளை விரட்டியடித்தனர். 


தொடர்புடைய செய்திகள்

1. வீடுகளை முற்றுகையிட்ட காட்டுயானைகள்
வீடுகளை முற்றுகையிட்ட காட்டுயானைகள்.