மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் கொரோனாவுக்கு 16 பேர் பலி புதிய உச்சமாக 1,360 பேருக்கு தொற்று + "||" + To Corona in one day 16 people were killed Infection in 1,360 people

ஒரே நாளில் கொரோனாவுக்கு 16 பேர் பலி புதிய உச்சமாக 1,360 பேருக்கு தொற்று

ஒரே நாளில் கொரோனாவுக்கு 16 பேர் பலி புதிய உச்சமாக 1,360 பேருக்கு தொற்று
புதுவையில் புதிய உச்சமாக 1,360 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 16 பேர் பலியாகி உள்ளனர்.
புதுச்சேரி, 

புதுவையில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை.

இதேபோல் இறப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 5ஆயிரத்து 173 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,360 பேருக்கு தொற்று உறுதியானது. 987 பேர் குணமடைந்துள்ளனர்.

மாநிலத்தில் இதுவரை 8 லட்சத்து 9 ஆயிரத்து 704 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 61 ஆயிரத்து 361 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. அதில் 1,842 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 8 ஆயிரத்து 778 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது 10 ஆயிரத்து 620 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 49 ஆயிரத்து 908 பேர் குணமடைந்துள்னனர்.

புதுச்சேரியில் 16 பேர் பலியாகி உள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற பெத்துச்செட்டி பேட் பகுதியை சேர்ந்த 73 வயது முதியவர், கொசப்பாளையத்தை சேர்ந்த 76 வயது முதியவர், அம்பாள்நகரை சேர்ந்த 54 வயது ஆண், முதலியார்பேட்டையை சேர்ந்த 70 வயது மூதாட்டி, புதுச்சேரியை சேர்ந்த 63 வயது மூதாட்டி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேங்காய்திட்டை சேர்ந்த 64 வயது மூதாட்டி, லாஸ்பேட்டையை சேர்ந்த 54 வயது ஆண், சாந்திநகரை சேர்ந்த 72 வயது முதியவர், 47 வயது பெண், வாணரப்பேட்டையை சேர்ந்த 53 வயது பெண் ஆகியோர் பலியாகினர்.

ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உப்பளத்தை சேர்ந்த 67 வயது முதியவர், புதுச்சேரியை சேர்ந்த 80 வயது முதியவர், கிரு‌‌ஷ்ணா நகரை சேர்ந்த 69 வயது முதியவர், முதலியார்பேட்டையை சேர்ந்த 63 வயது முதியவர், கலாம் வீதியை சேர்ந்த 89 வயது மூதாட்டி, காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காரைக்காலை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஆகியோர் கொரோனாவுக்கு இரையாகி உள்ளனா். இதனால் இறப்பு எண்ணிக்கை 833 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இறப்பு 1.36 சதவீதமாகவும், குணமடைவது 81.34 சதவீதமாகவும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 1,955 பேர் பாதிப்பு
ஆந்திராவில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 1,955 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2. புதுச்சேரியில் புதிதாக 1,237 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 26 பேர் பலி
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,237 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இங்கிலாந்தில் இருந்து 1,200 ஆக்சிஜன் சிலிண்டர்கள் விமானம் மூலம் இந்தியா வந்து சேர்ந்தது
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்சிஜன் நிறுவனம் இந்தியாவிற்கு 1,200 ஆக்சிஜன் சிலிண்டர்கள் விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளது.
4. தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்களுக்கு நிரந்தர பணி - சுகாதாரத்துறை அறிவிப்பு
தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்கி சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
5. கர்நாடகத்தில் 1,100 பேருடன் உதவி மையம் அமைக்க முடிவு - சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்
கர்நாடகத்தில் வீட்டு தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்க 1,100 பேருடன் உதவி மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளோம் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.