மாவட்ட செய்திகள்

வீடு இடிந்து மூதாட்டி சாவு + "||" + The house collapsed and the grandmother died

வீடு இடிந்து மூதாட்டி சாவு

வீடு இடிந்து மூதாட்டி சாவு
திருமங்கலம் அருகே வீடு இடிந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
பேரையூர்,மே.-
திருமங்கலம் தாலுகா, தங்களாச்சேரியைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள் (வயது 65). இவர் அரசால் வழங்கப்பட்ட காலனி தொகுப்பு வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன் தினம் இரவு காற்றுக்காக வீட்டின் வெளியே பாண்டியம்மாள் படுத்து தூங்கியுள்ளார். அதிகாலையில் லேசான சாரல் மழை பெய்ததால் வீட்டுக்குள் சென்று தூங்கினார். அப்போது திடீரென தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது. இதில் பாண்டியம்மாள் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.